இறையன்பின் பார்வையால் பிறக்கும் விசுவாசம்

நம் கடமையிலிருந்தல்ல, மாறாக, நாம் வரவேற்கவேண்டிய அன்பின் பார்வையிலிருந்து விசுவாசம் பிறக்கிறது என்ற கருத்தை மையமாக வைத்து திங்கள் தின டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

நம்மை நோக்கித் திருப்பப்படும் அன்பின் பார்வையை வரவேற்று ஏற்பதன் வழியாக நம் விசுவாசம் பிறக்கிறது, மற்றும் மறுபிறப்பைக் காண்கிறது, நம் திறமைகளையும் திட்டங்களையும் அடிப்படையாகக் கொள்ளாமல், கடவுளின் பார்வையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது கிறிஸ்த வாழ்வு  அழகானதாக மாறுகிறது, என்கிறது, பிப்ரவரி 14, திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி.

மேலும், மார்ச் மாதம் திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் குறித்த விபரங்களை திங்களன்று வெளியிட்டது திருப்பீடம்.

தவக்காலத்தைத் துவக்கிவைக்கும் விபூதி புதனன்று, அதாவது மார்ச் மாதம் 2ம் தேதி, உரோம் நகர் சாந்த் அன்சல்மோ கோவிலிலிருந்து உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்குப் பவனியாகச் சென்று 5 மணிக்குச் சாந்தா சபினா பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை

மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு திருப்பீடத்தில், சில அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பது குறித்த வாக்கெடுப்பு இடம்பெறும்.

25ம் தேதியன்று புனித பேதுரு பெருங்கோவிலில் பாவப்பரிகார வழிபாடு, அதாவது, ஒப்புரவு அருளடையாள வழிபாடு திருத்தந்தையுடன் இடம்பெறும்.

Comments are closed.