இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
‘போர்ச்சுகலின் புனித பிரான்சிஸ் சேவியர்’ என அழைக்கப்படுபவரும், இன்றைய புனிதருமான புனித அருளானந்தரை நமது இந்திய தேசத்திற்கு நமக்காக அனுப்பிவைத்த நம் ஆண்டவருக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
கத்தோலிக்க சமய நெறிகளை பாமரர்களுக்கும் புரியும்விதத்தில் எடுத்துரைத்த புனித அருளானந்தரிடமிருந்து எளிய நற்செய்தி அறிவிக்கும்பணியினை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
மதக் கலவரங்களை உண்டாக்க நினைக்கும் எண்ணற்ற தீயசக்திகளின் மத்தியில் வாழும் நாம் அவற்றை எதிர்க்கும் துணிவினை புனித அருளானந்தரிடம் இருந்து கற்றுக் கோள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
சென்ற ஆண்டு நம்மை விட்டு பிரிந்த நமது உற்றார், உறவினர்களின் ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.