கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்த திருத்தந்தை
இயேசுவில் நம் பார்வையைப் பதிப்பவர்களாக, இறைவேண்டலில் ஒருவர் ஒருவருக்கு அருகாமையில் இருப்போம் என ஜனவரி 25, செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்வ ஒன்றிப்பு செப வாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமையன்று, டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திடமான வழிகளில் மனவுறுதியுடன் கடவுளைத் தேடுவதில் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம், இயேசுவில் நம் பார்வையைப் பதிப்பவர்களாக, இறைவேண்டலில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்போம், என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 18 முதல் 25 வரை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்வ ஒன்றிப்பு செப
வாரத்தின் இறுதி நாளான ஜனவரி 25, அதாவது, புனித பவுலின் மனந்திரும்புதல் விழாவன்று மாலை உரோம் நேரம் 5.30 மணிக்கு, இந்திய நேரம் இரவு 10 மணிக்கு ஏனைய கிறிஸ்தவ சபை பிரநிதிநிதிகளுடன் இணைந்து செபவழிபாடு ஒன்றை நடத்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பவுல் பெருங்கோவிலில் திருத்தந்தையுடன் இடம்பெறவுள்ள இந்தச் செபவழிபாட்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் பிரதிநிதி, ஆங்கிலிக்கன் பேராயரின் பிரதிநிதி ஆகியோருடன் கிறிஸ்தவ சபைகளின் விசுவாசிகளும் கலந்துகொள்வர்.
Comments are closed.