இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 56:1-ல்,
“கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.” என கூறப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு இடங்களில் கொத்தடிமைகளாக இருந்து அளவற்ற துன்பங்களை அனுபவித்துவரும் எண்ணற்ற அப்பாவிகள் அவர்களது அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
““இறைமகன் நீரே” என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.” என வாசித்தோம்.
பல ஆண்டுகளாக தீய ஆவிகளின் பிடியில் ஆட்பட்டு துன்புறும் எண்ணற்ற மக்களை ஆண்டவர் தொட்டு அத்தீய ஆவிகளை விரட்டி அம்மக்களை மீட்டிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
மறைசாட்சியாக மரித்தவரும், தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பாதுகாவலரும், இன்றைய புனிதருமான புனித செபஸ்தியார் வழியாக கொரோனா நோய்த்தொற்று நீங்க இறைவனை செபிப்போம். நோய்த்தொற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
கொரோனா நோய்த் தொற்றைக் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அரசின் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.