மனிதரைத் தேடி இறைவன் வந்துள்ளதே கிறிஸ்மஸ்
உண்மையைத் தேடிவந்த மனித குலம், உண்மையை எடுத்துரைக்க வந்த உண்மையாம் இறைமகனைக் கண்டுகொண்டது குறித்து தியானிக்க, கிறிஸ்மஸ் நமக்கு அழைப்புவிடுக்கிறது என, தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 3ம் தேதி, திங்கள்கிழமையன்று திருத்தந்தையால் வெளியிடப்பட்ட டுவிட்டர் செய்தி, ‘வரலாற்றின் முக்கிய நிகழ்வைக் குறித்து தியானிக்க கிறிஸ்மஸ் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கு மீட்பை வழங்கும் உண்மையை எடுத்துரைக்கவும், அவர் வாழ்வில் நம்மை பங்குதாரர் ஆக்கவும்; பாவத்தால் காயமுற்றுள்ளபோதிலும், உண்மையையும், இரக்கத்தையும், மீட்பையும், கடவுளின் நன்மைத்தனத்தையுயம் தேடிவரும், மனிதரைத் தேடி இறைவன் வந்துள்ளதே இந்நிகழ்வு’ என எடுத்துரைக்கிறது.
மேலும், இதே நாளில் உரோம் நகரின் கிரகோரியன் பல்கலைக்கழக பேராசிரியர், இயேசு சபை அருள்பணி Marko Ivan Rupnik, இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரின் முன்னாள் பேராயர், கர்தினால் Crescenzio Sepe, புதிய நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர், பேராயர் சல்வதோரே பிசிக்கெல்லா, கர்தினால் Edoardo Menichelli, பேராயர் Adriano Bernardini, பேரருட்திரு Vito Pio Pinto ஆகியோர் திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.
Comments are closed.