மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 80:18-ல்,
“இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.” என கூறப்பட்டுள்ளது.
தனது பாவங்களுக்காக மனம் வருந்தும் அனைவரையும் இறைவன் மன்னித்து அவர்களுக்கு புதியதொரு வாழ்வை அளித்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்
“ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.” என வாசித்தோம்.
ஆண்டவரது இரண்டாம் வருகைக்கு நாம் அனுதினமும் ஆயத்தமாய் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
திருச்சபையின் 37-வது திருத்தந்தையும், கத்தோலிக்கத்திற்கு எதிரான தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராக போராடியவரும், இன்றைய புனிதருமான முதலாம் டாமசஸை நமது திருச்சபைக்குத் தந்தருளிய நம் தேவனுக்கு நன்றியாக இன்றைய புனித இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
உலக நாடுகளில் பரவிவரும் புதியவகை ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் விலக வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மை காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.