இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
கருவிலேயே அழிக்கப்பட்ட சிசுக்கள், மற்றும் நோயினால், வன்கொடுமையினால், விபத்துக்களினால் இறந்த அப்பாவி குழந்தைகளின் ஆன்மாக்களை, இறைவன் தனது வான் வீட்டில் தூய சம்மனசுக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
தங்களது குழந்தைகளை இவ்வுலகில் விட்டுவிட்டு,
நோயினாலும், விபத்துக்களினாலும் மரித்த எண்ணற்ற பெற்றோர்களின் தவிக்கும் ஆன்மாக்கள் நித்திய இளைப்பாற்றியை அடைந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து
தங்களது வாழ்வை இறைப்பணிக்காக அர்பணித்த எண்ணற்ற மரித்த குருக்கள், கன்னியர்கள் மற்றும் துறவறத்தார் ஆகியோரை இறைவன் தனது சிறகுகளால் எந்நாளும் அணைத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
கொரோனா நோய்த் தொற்றினால் இறந்த அனைத்து ஆன்மாக்களும் இறைவனின் இரக்கப் பெருக்கத்தினால் நித்திய வாழ்வை வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.