உயிரினங்கள் அனைத்தையும் பாதிக்கும் மனித நடவடிக்கை
கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் நாம் மேற்கொள்ளும் சிந்தனைகள், குறிப்பாக, சுற்றுச்சூழல் மீது நாம் கொண்டுள்ள அக்கறை, பல பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணங்களில் ஊடுருவி இருப்பதை, இந்த அரங்கத்தில் காணமுடிகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 7, இவ்வியாழனன்று, ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.
உரோம் நகரின் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகமும், UNESCO நிறுவனமும் இணைந்து, சுற்றுச்சூழலை மையப்படுத்தி, இலாத்தரன் பல்கலைக்கழகத்தில், நிறுவியுள்ள ஒரு புதிய பாடத்திட்டத்தை துவக்கிவைக்கும் நிகழ்வை தலைமையேற்று நடத்திய வேளையில், திருத்தந்தை, இவ்வாறு தன் உரையை துவக்கினார்.
அண்மையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பார்த்தலோமேயு, ஆங்கிலிக்கன் சபையின் உலகத்தலைவர் பேராயர் ஜஸ்டின் வெல்பி, ஆகியோருடன் தானும் இணைந்து, COP26 சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் உலகத் தலைவர்களுக்கென உருவாக்கிய ஒரு சிறப்பு விண்ணப்பத்தைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.
மனிதர்களாகிய நாம் பூமிக்கோளத்தில் விளைவித்துவரும் அழிவுகள், சுற்றுச்சூழல், நீர், நிலம் ஆகியவற்றை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக, மனிதர்கள் உட்பட, உயிரினங்கள் அனைத்தையும் பாதிக்கின்றன என்பதை, திருத்தந்தை, தன் உரையின் துவக்கத்தில் ஓர் எச்சரிக்கையாக விடுத்தார்.
சிந்தனைகள் சந்திப்பதற்கும், அறிவை வளர்ப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள், எதிர்காலத்திற்கென, இளம் தலைமுறையினரை உருவாக்கும் உன்னத இடங்கள் என்பதை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையப் பல்கலைக்கழகங்கள், சுற்றுச்சூழலைக் குறித்த மனமாற்றத்தை இளையோரிடம் உருவாக்க கடமைப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.
படைப்பிற்கும், மனித சமுதாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பை, இறையியல், மெய்யியல் மற்றும் நன்னெறி ஆகிய கோணங்களிலிருந்து சிந்திப்பதற்கு தற்போது துவங்கப்படும் பாடத்திட்டம் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக திருத்தந்தை கூறினார்.
கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவ
Comments are closed.