இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் 7-ஆம் நாளான இன்று, கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட, கடவுளால் அன்பு செய்யப்படுகின்ற நாம், நாம் நமது வாழ்வின் துன்ப வேளைகளில் நம்பிக்கையோடு தளராது விடாமுயற்சியுடன் எழுந்து வர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்று தூய செபமாலை அன்னையின் விழாவினைக் கொண்டாடும் நாம், செபமாலையே சாத்தானுக்கு எதிரான சிறந்த ஆயுதம் என்பதை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
குடும்ப அமைதி, சமாதானம், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றிற்கு குடும்ப செபமாலை மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து அனுதினமும் குடும்ப செபமாலையை தொய்வில்லாமல் இல்லங்களில் செபிக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில், “பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.” என வாசித்தோம்.
இறை சித்தத்தை ஏற்கும் தாழ்ச்சியை நாம் அன்னை மரியாளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.