அன்பின்மையே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம்

எப்போதும் நம்முடனேயே இருக்கும் தினசரி பிரச்சனைகளில் இருந்தல்ல, மாறாக, அன்பின்மை எனும் உண்மை பிரச்சனையிலிருந்து நம்மை விடுவிக்கவே, இறைவன் வருகிறார், என்ற கருத்தை மையமாக வைத்து, இச்செவ்வாய்க்கிழமை, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘நம் தினசரி பிரச்னைகளிலிருந்தல்ல, மாறாக, நம் அன்பின்மையிலிருந்து நம்மை விடுவிக்கவே இறைவன் வருகிறார். நம் தனிப்பட்ட, சமுதாய, அனைத்துலக, மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு இந்த அன்பின்மையே காரணம். நம்மைப்பற்றி மட்டும் எண்ணிக்கொண்டிருப்பதுதான், அனைத்து தீமைகளுக்கும் தந்தை’ என்று, ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட்ட தன்  டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை.

ஆகஸ்ட் 17, இச்செவ்வாய்க்கிழமை வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,364 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன

Comments are closed.