இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில்
“ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை.! என கூறப்பட்டுள்ளது.
நாம் ஒருவர் மற்றவர் மீது தூய அன்பு செலுத்தி நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.”
அலகையைத் தவிர்த்து ஆண்டவரைப் பின் தொடந்து வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியை நாம் கொண்டிருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போல நாமும் விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று நமது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.