இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தும் ஆண்டவர், “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே!” என்கிறார்.
ஆம், கடவுள் இன்றும் நம்மோடு இருப்பவர், அவர் நம்முடைய கண்ணீரைக் காண்பவர், நம் அழுகுரலைக் கேட்கின்றவர். அப்படிப்பட்டவரிடம் நம் சுமைகளை இறக்கி வைக்கும்போது, அவர் நமக்கு நிச்சயம் இளைப்பாறுதலைத் தருவார் என நம்பிக்கைக் கொள்ள இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் கடவுள் தம் உடன்படிக்கைக்கு உண்மையாய் இருப்பது போல், நாமும் உண்மையாய் இருக்க
இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
கனிவையும், தாழ்ச்சியையும் நாம் இயேசுவிடம் இருந்து கற்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்தினால் ஆயரும், இன்றைய புனிதருமான புனித பொனவென்ச்சரை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று நமது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.