இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழாவை இன்று கொண்டாடும் நாம், திருமுழுக்கு யோவான் கூறிய “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” – என்ற வார்த்தைகளை நமக்கு விடுத்த அழைப்பாக ஏற்றுக் கொண்டு விண்ணரசு வருகைக்காக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெறவந்த யூதர்களிடம் விரியன் பாம்புக் குட்டிகளே என்கிறார். சகோதரனுடைய மனைவியோடு முறைதவறி வாழ்ந்த ஏரோதை கண்டிக்கிறார்.
உண்மையை அச்சமின்றி எடுத்துரைத்த திருமுழுக்கு யோவானிடமிருந்து துணிவு என்னும் வரத்தினைக் கைக்கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
“எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமைமிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை.” (மத் 3:11) என திருமுழுக்கு யோவான் கூறுகிறார்.
திருமுழுக்கு யோவானிடமிருந்து தாழ்ச்சி என்னும் வரத்தைக் கைக்கொள்ள இந்த முதல் மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
ஆண்டவரின் வருகைக்காக அனைவரையும் ஆயத்தமாக்கிய திருமுழுக்கு யோவானிடமிருந்து நற்செய்தி அறிவித்தல் என்னும் சீரிய பணியினை கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று நமது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.