கடவுள் நம்மீது காட்டும் பேரன்பை ஏற்று வாழ்வதால்
கடவுள் நம்மீது காட்டும் பேரன்பை ஏற்று வாழ்வதால், வாழ்க்கையில் கிடைக்கும் நன்மைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை எழுதியுள்ளார்.
“நம்மைக் காப்பாற்றுவதற்கும், நம் அகத்தைக் குணப்படுத்துவதற்கும் ஒரே வழி, நம்மை அன்புகூர்வதே என்பதையும், நம்மை மாற்றுகின்ற அவரது வாக்குமாறாத அன்பை ஏற்பதாலாயே நம் வாழ்வு சிறப்படையும் என்பதையும், கடவுள் அறிந்திருக்கிறார்” என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று பதிவுசெய்துள்ளார்.
Comments are closed.