† இன்றைய புனிதர் † (மே 29)
✠ பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் ✠
(St. Germain of Paris)
பாரிஸ் மறைமாவட்ட ஆயர்/ ஏழைகளின் தந்தை:
(Bishop of Paris/ Father of the Poor)
பிறப்பு: கி.பி. 496
அவுடன், ஃபிரான்ஸ்
(Autun, France)
இறப்பு: மே 28, 576
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
புனிதர் பட்டம்: கி.பி. 754
திருத்தந்தை இரண்டாம் ஸ்டீஃபன்
(Pope Stephen II)
நினைவுத் திருநாள்: மே 28
புனிதர் ஜெர்மாய்ன், பாரிஸ் மறை மாவட்ட ஆயரும் (Bishop of Paris) “ஏழைகளின் தந்தை” (Father of the Poor) என அறியப்படுபவரும் ஆவார்.
ஃபிரான்ஸ் நாட்டின் “அவுடன்” (Autun) என்ற இடத்தினருகே வசதியுள்ள “கல்லோ-ரோமன்” (Gallo-Roman) இன பெற்றோருக்குப் பிறந்த ஜெர்மாய்ன், “பர்கண்டியிலுள்ள” “அவல்லான்” (Avallon in Burgundy) என்ற இடத்தில் கல்வி கற்றார்.
தமது 35 வயதில் புனிதர் “அக்ரிப்பினா” (Saint Agrippina of Autun) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், அருகாமையிலுள்ள “புனிதர் சிம்போரியன்” (Abbey of St. Symphorian) துறவு மடத்தின் மடாதிபதியானார்.
கி.பி. 555ம் ஆண்டு, பாரிஸ் நகரின் ஆயர் “சிபெலியஸ்” (Sibelius, the Bishop of Paris) இறந்துவிடவே, அரசர் “முதலாம் சில்டேபர்ட்” (Childebert I) ஜெர்மாய்னை ஆயராக தேர்ந்தெடுத்து அருட்பொழிவு செய்வித்தார்.
ஆயர் ஜெர்மாய்ன் அவர்களின் ஆலோசனைகளாலும், செல்வாக்கினாலும் அரச குடும்பமே ஒரு சிறப்பான சீர்திருத்த வாழ்க்கை வாழ்ந்தது. அரசவையில் பணியாற்றியபோதும், எளிமையையும், துறவு வாழ்வையும் ஒருபோதும் எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினாலும்,
அருமையான
, எளிமையான மறையுரையாலும் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரது மறையுரையைக் கேட்கவே மக்கள் கூடி வந்து, காத்திருந்தனர்.
566ம் ஆண்டு, “டூர்ஸ்” நகரில் நடந்த கிறிஸ்தவ மாநாட்டில் (Second Council of Tours) பங்குபெற்றார். கி.பி. 557ம் ஆண்டு முதல் கி.பி. 573ம் ஆண்டு வரை பாரிஸ் நகரில் நடந்த மூன்றாம் மற்றும் நான்காம் மாநாடுகளிலும் (Third and Fourth Councils of Paris) கலந்துகொண்டார். “கௌல்” (Gaul) மாநிலத்தில் வழக்கத்திலிருந்த பாகனிய பழக்கங்களை முறித்துக் கொள்ளும்படி அரசனை அவர் தூண்டினார். பெரும்பாலான கிறிஸ்தவ திருவிழாக்களுடன் பாகன் கொண்டாட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தடைசெய்யப்பட்டது.
Comments are closed.