பரிசுத்த ஆவியானவரின் வருகைக்காய் தயாரிக்க நவநாள் செபம் & ஜெபமாலை

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்! நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்!
வாழ்வோரின் இருதய ஒளியே வந்தருள்வீர்.
வாசகம்: யோவான் 14 : 15 – 17, 26 – 27
தேவ பயம் என்னும் கொடை
பரிசுத்த ஆவியார் அருளும் தேவ பயம் என்னும் கொடை, நாம் கடவுள் மீது இறையாண்மை கொண்ட மரியாதை கொள்ள நம்மை நிரப்பி, நமது கொடிய பாவத்தினால் நாம் கடவுளுக்கு எவ்வித வருத்தமும் விளைவிக்காமல் இருக்கச் செய்கிறது. இது, நமது சிந்தனையிலிருக்கும் நரகத்தைப் பற்றிய பயமல்ல. நமது விண்ணகத் தந்தையின் மேலுள்ள இறை பக்தியின் உணர்வினாலும் நாம் அவரது பிள்ளைகள் என்ற மரியாதையினாலும் எழுகின்ற பயம். இதுவே நம்மை இவ்வுலகச் சிற்றின்பங்களிலிருந்து பிரித்து, எவ்விதத்திலும் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற நமது ஞானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் பயம். ‘கடவுளுக்கு பயப்படுவோர் தங்கள் இதயத்தைத் திடப்படுத்தி, அவருடைய கண்களுக்கு முன்பாகத் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்.”
செபம்:
ஓ தெய்வீகத் தேவ பயத்தின் ஆவியாரே வாரும். வந்து என் உள்மனதை ஊடுருவி, என் கடவுளும் ஆண்டவருமாகிய உம்மை நோக்கி என்றென்றும் என் முகத்தைத் திருப்பி, உம்மை வருந்தச் செய்யும் எல்லா செயல்களைக் களையும்படிச் செய்து, விண்ணகத்தில் உம்முடைய தெய்வீக மகத்துவத்தின் தெளிவான கண்களுக்கு முன்பாக என்னைத் தகுதியுள்ளவராக்கியருளும். மூவொரு கடவுளின் ஒன்றிப்பில், உலகம் முடியும் வரை என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
பரிசுத்த ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
பரிசுத்த ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
பரிசுத்த ஆவியானவரே எழுந்தருள்வீர்,
வானினின்று உமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
வாசகம்: உரோமையர் 8 : 18 – 23, 26
பரிசுத்த ஆவியானவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)
பரலோகத் தந்தையோடும் அவரது திரு மகனாம் இயேசு கிறிஸ்துவோடும் உறவாடும் பரிசுத்த ஆவியானவரே! விண்ணகச் சாட்சிகளின் பெருங்கூட்டத்திற்கு முன் முழந்தாள்படியிட்டு, என்னையும், என் ஆன்மாவையும், என் உடலையும் அர்ப்பணிக்கிறேன். உமது தூய்மையின் பிரகாசத்தையும், உமது தவறாத நீதியின் திறமையையும், உமது அன்பின் வலிமையையும் நான் போற்றிப் புகழ்கிறேன். என் ஆன்மாவின் வல்லமையும் ஒளியும் நீரே. நான் இருப்பதும் இயங்குவதும் வாழ்வதும் உம்மாலே தான். என் அவநம்பிக்கையினாலும் என் அற்பப் பாவங்களினாலும் உம்மை நான் ஒருபோதும் துயரத்துக்குள்ளாக்காமலிருக்க என் முழு உள்ளத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகிறேன். என் ஒவ்வொரு சிந்தனைகளையும் இரக்கத்துடன் காத்து, உமது ஒளியைக் காணவும், உமது குரலைக் கேட்கவும், உமது இரக்கமுள்ள ஊக்கங்களைப் பின்பற்ற தயை புரியும். நான் உம்மை என்றும் பற்றிக் கொண்டு, என் பலவீனத்திலே என்னைக் காக்கும்படி என்னை உமக்களிக்கிறேன். இயேசுவின் துளையுண்ட கால்களைப் பிடித்து, அவருடைய ஐந்து திருக் காயங்களையும் பார்த்து, அவருடைய திரு இரத்தத்தில் நம்பிக்கை கொண்டு, குத்தித் திறக்கப்பட்ட விலாவையும் இதயத்தையும் வணங்கி, ஆராதனைக்குரிய ஆவியாரே, என் பலவீனத்தின் உதவியாளரே, நான் என்றும் உமக்கு எதிராகப் பாவம் செய்யாதவாறு, உம் அருளினால் என்னைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் பரிசுத்த ஆவியாரே, ‘ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்” என்று நான் எங்கும் எப்பொழுதும் சொல்ல உமதருளைப் பொழிந்தருளும்.
ஆமென்.
பரிசுத்த ஆவியானவரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, பரலோகத்திற்குச் செல்லும் முன் உமது திருத்தூதர்கள் மற்றும் சீடர்களின் ஆன்மாக்களின் வேலைகளை நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக வாக்களித்தீரே. உமது இரக்கத்தின் அன்பின் வேலைகளை எங்கள் ஆன்மாக்களில் முழுமையாக்க, அதே பரிசுத்த ஆவியானவரை எங்களுக்கும் தந்தருளும். அழிந்து போகும் இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று கொள்ளமல், நிலைவாழ்வை அளிக்கும் உன்னதச் செல்வத்தின் மீது ஆசை கொள்ள உமது ஞானத்தின் ஆவியைப் பொழிந்தருளும். உமது தெய்வீக உண்மையின் ஒளியால் எங்களது மனதை விழிப்பூட்ட உமது புரிந்துணர்வின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை மட்டும் மகிழ்வித்து பரலோகத்தை அடையும் வழியைத் தேர்ந்தெடுக்க உமது ஆலோசனையின் ஆவியைப் பொழிந்தருளும். எங்கள் மீட்புக்கு எதிரானத் தடைகளைச் சகித்து, எங்களது சிலுவையை சுமந்து உம்மைப் பின்செல்ல உமது வலிமையின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை அறிய, எங்களை அறிய, புனிதர்களின் வழியைப் பின்பற்றி முழுமை அடைய உமது அறிவின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளுக்கு செய்யும் சேவையில் இனிமையும் மகிழ்ச்சியும் அடைய உமது பக்தியின் ஆவியைப் பொழிந்தருளும். நாங்கள் கடவுளிடம் அன்பான பயபக்தி கொண்டு, கடவுளை வருத்தப்படுத்தும் எந்தச் செயலையும் செய்யமலிருக்க உமது தேவபயத்தின் ஆவியைப் பொழிந்தருளும். ஆண்டவரே உமது உண்மைச் சீடர்களின் அடையாளத்தால் எங்களை முத்திரையிட்டு, உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும்.
ஆமென்.
*பரிசுத்த ஆவியாரின் நவநாள் செபம்.*
மூவொரு இறைவா, உம்மைத் தொழுகிறோம், அனைத்திற்கும் முதல் பொருள் நீரே.
இறைவா, உம்மை விசுவசிக்கிறோம், என்றும் மாறாத நிலையான உண்மை நீரே.
இறைவா, உம்மை நம்புகிறோம், எல்லையற்ற இரக்கமும், நிறையாற்றலும் நீரே.
இறைவா, உம்மை அன்பு செய்கிறோம், அளவற்ற அன்பும், நன்மையும் நிறைந்தவர் நீரே.
அன்புத் தந்தையே, உம் பரிசுத்த ஆவியாரை அனுப்பியருளும், அவர் எங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவாராக.
இனிய இயேசுவே, உமது பரிசுத்த ஆவியாரின் கொடைகளை அனுப்பியருளும், அனைத்திலும் நாங்கள் இறைவனை மகிமைப்படுத்துவோமாக.
அக்னி நாவுபோல் சுடர்விடும் அன்பின் பரிசுத்த ஆவியே, என் மேல் எழுந்தருளி வாரும். இறைமக்கள் உள்ளங்களை உம் அருள் ஒளியால் நிரப்பும். அவற்றில் அன்புத் தீயைப் பற்றி எரியச் செய்வீர். உம்முடைய அறிவுச் சுடரொளியை வரவிடுவீர். அதனால் இந்தப் பூவுலகைப் புதுப்பிப்பீர்.
*செபிப்போமாக.*
அளவற்ற அன்பும், இரக்கமும், நிறைந்த உன்னத இறைவா, பரிசுத்த ஆவியின் ஆற்றலால் உம் மக்களின் உள்ளங்களைப் புதுப்பித்தவர் நீரே. அந்த பரிசுத்த ஆவியின் ஆற்றலால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அதனால் நன்மையானதை நாடவும் அருள்புரிவீராக. அவர் அளிக்கும் ஆறுதலால் துணிவை அடையும் மனவலிமையையும் எமக்குத் தாரும்.
*ஆமென்.*

Comments are closed.