கம்பு, சிலம்பு ஆசான் அமரர் டானியேல் துரையப்பா அவர்கள் நினைவாக
பறந்து பாய்ந்து வரும் கம்பு கொண்ட வீரனை மார்பு நிமிர்த்தி தடுத்து நிறுத்தும் வீரத் தமிழன்
சிலம்புக்கே இவர் அப்பன்
கலையின் இலவச ஆசான்
வடமாகாண அறிந்த தமிழர் வீர விளையாட்டின் ஆனையூர் கோமகன்
அமைதியும் ,நேர்மையும், வீரமும் கொண்ட தங்க மகன்
நான் கண்ட முதல் முதுமையின் பொக்கிசம் ஊரே மறந்த மகான்
தந்தை டானியேலிடம் வீரக் கலை
கற்றுத் தேர்ந்த ஞானச்சீடன்
ஊரவரை விட வெளியூரவரே கம்பு,சிலம்பம் கற்றோர் பலநூறு
சாதி,மதம் கடந்த புத்தன்
காரணம் சின்னக்கண்டும் இவர் சீடன்
தமிழை நேசித்ததால் எம் கலைத்தாயை நேசித்த போர் வீரன்
ஆனையூர் ஒற்றை பணை வணபிதா றோசான் உன் பேரன் எம் பெருமை
உன்னை இந்த வையகமே எப்போதும்
காலில் வீழ்ந்து வணங்கும் ஜயா லுத்தப்பா
தமிழ் புரலவன் ஆனையூரான்
——————————————————
Comments are closed.