அமரர் எஸ்தாக்கி பாவிலு மூப்பர் நினைவாக

எஸ்தாக்கி பாவிலு என் அம்மப்பன்
ஆனையூர் மூப்பன்!!
சேட்டும் போடாத தாத்தன்
முரன்பட்ட முதல் சண்டை அது!!
அன்று பாவிலு மணி அடியாவிடின்
பூசை இல்லை
பீடம் ஆயத்தம் இல்லை எனின் நற்கருணை இல்லை!!
பிரஞ்சு குருவுக்கே பிராத்தனை சொல்லியவர்!!
தாபரிப்பு காசுக்கு பிச்சை போகா வீடில்லை அவர் நம்பிக்கையின் தனிநாயகம்!!
இசை அறியா ஞானி பசாம் வாசித்தால் பரலோகமே கண்ணீர் வடிக்கும்!!
இவரின் ஒப்பாரி இலாவிடின் பிணம் நடக்காது ,கல்லறை மூடாது!!
காலையில் அன்னை வீட்டில்
மாலையில் கடலன்னைமடியில் வாழ்க்கை!!
கடல் உணவை கரை சேர்த்து கையளவு அன்னையின் பறியில்
இட்டு ஆலயம் காத்த மூதாதையரின் தலைமகன்!!
மீன் விற்ற காசில் சில ரூபாயை கள்ளுக்கு பதுக்கி மிகுதியா செல்லத்துக்கு கொடுக்கும் மனுநீதிச்சோழன்!!
மப்படித்தால் செல்லத்தோடு செல்லச் சண்டை !!
இவர் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறை இல்லை !!
ஊருக் கண்ணுப் பட்டதோ
உறவுக் கண்ணுப் பட்டதோ
சிறுத்தப்போல வாழ்ந்த மனுஷ !!!
உழைப்போடு உயிர் சாய்ந்தது கடலன்னை மடியில்
அன்னையின் விண்ணக வீட்டிலும் மூப்பர்தான்!!
பேரா நீர் தந்த பசுப்பால் உம்மை நினையாவிட்டால் நஞ்சாகிவிடும்
தமிழ் புரவலன் ஆனையூரான்
————————————-
((கிறிஸ்தவர்களை
வழிநடத்துகிறவர்களைப் பற்றிச் சொல்லும்போது பிரஸ்பிட்டிரோஸ்
என்ற கிரேக்க வார்த்தை “மூப்பர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ))

Comments are closed.