குழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்
அற்புத குழந்தை இயேசுவே! அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும், நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உம் ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக! குழந்தை இயேசுவே! என் செபத்தை ஏற்றருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
– ஆமென்
Comments are closed.