இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
கொரோனா என்னும் இந்த கொடிய நோய்தொற்றினால் நேற்று நள்ளிரவு இறைவனடி சேர்ந்த சென்னை உயர்மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஃபிரான்சிஸ் சேவியர் அடிகளார் அவர்களின் ஆன்மா இறைவனின் முடிவில்லா நித்திய பேரின்பத்தை அடைந்திட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடலில்
“ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.” என்று திருப்பாடல்கள்(51:7) கூறுகிறது.
அது போல நமதாண்டவர் இயேசு நம் பாவங்களை முழுமையாக மன்னித்து நம்மைத் தூய்மையாக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் இந்த நோய்த்தொற்றின் வேகம் நன்கு குறைய மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
தினந்தோரும் நோய்த் தொற்றினால் உண்டாகும் உயிரிழப்புகள் நன்கு குறைந்திட நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
கொரோனா நோயினால் சிகிச்சை பலனின்று உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!

Comments are closed.