பெறுவதிலும் தருவதிலே தான் அதிக இன்பம்…..
நமது செபம் எப்படி இருக்க வேண்டும்? எவ்வாறு செபிக்க வேண்டும்? என்று இறைமகன் இயேசு கற்பித்துள்ளார். நாம் செபிக்கும் நேரத்தில் தாம் நாம் இனி வாழ வேண்டிய பொழுதிற்கான மூச்சுக்காற்றை பெறுகின்றோம். வாய்ப்பேச்சு மட்டும் செபமல்ல.
செபம் என்பது உள்மனதில் தோன்றி மனதின் ஆழத்தில் உடைந்து வார்த்தை வழியாக வெளிவருவது எவ்வளவு அதிகமாக நாம் ஒருவரை சந்திக்கின்றோமோ அவ்வளவு அதிகமாக அவரோடு நாம் கொண்டுள்ள உறவு வலுப்படும். அது போலவே, எவ்வளவு அதிகமாக நாம் இறைவனோடு உரையாடுகிறோமோ எவ்வளவு அதிகமாக இறைவனோடு நாம் கொண்டுள்ள நெருக்கமும் உறவும் அதிகமாகும். காரணம் ‘செபம் என்பது உரையாடல்’ வானகத் தந்தை மீது நமக்குள்ள உறவு நாளுக்கு நாள் வளரவேண்டும்.
‘செபம் என்பது செயல்’ நாம் எப்போதெல்லாம் ஒய்வு, விளையாட்டு, உண்ணுதல், உதவுதல் போன்ற நிகழ்வகளை,செயல்களை இறைவன் பெயரால் செய்கின்றோமோ அப்போது அச்செயல்கள் செபமாக உருவெடுக்கிறது. இறைவனைத் துதித்து,புகழ வேண்டியது நம் கடமை அவர் கேட்கும் போதும் தருவார். கேட்காவிடினும் நம் தேவையறிந்து தருவார். காரணம் பெறுவதிலும் தருவதிலே தான் அதிக இன்பம் காண்பவர் அவர்.
Comments are closed.