ஆயர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி அவர்களின் உருவச்சிலை
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி அவர்களின் உருவச்சிலை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணட் ஞானப்பிரகாசம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
ஆயர் பெற்றக்கினி ஒறற்ரோறியன் சபைச் சார்ந்த இத்தாலி நாட்டவர். இவர் 1846 ஆம் ஆண்டு கொழும்பு புனித லூசிய பேராலயத்தில் ஆயராக அருட்பொழிவு பெற்று 1849 ஆம் ஆண்டு யாழ்.மறைமாவட்ட அப்போஸ்தலிக்க விக்கராக நியமிக்கப்பட்டு பணிப்பொறுப்பை ஏற்றுகொண்டர். இவரின் உருவச்சிலை திருமறைக்கலாமன்றத்தில் சிற்பக்கலையை பயின்ற ஆசிரியர்களான திரு. கபேசன், திரு. கிருபா ஆகியோரினால் பேராசிரியர் சரத் சந்திரஜீவா அவர்களின் வழிகாட்டலில் யாழ். திருமறைக் கலாமன்ற இயக்குநர் அருட்கலாநிதி மரிய சேவியர் அடிகளின் ஆலோசனையுடன் அமைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி –Catholic Media – Jaffna
Comments are closed.