இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவின் காரணமாக இல்லங்களில் இருக்கும் குடும்பங்களில் அன்பு பெருகிடவும், குடும்ப உறவுகள் மேம்படவும், நல்லதொரு வாய்ப்பினை அளித்த இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இறை அருளால் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து தங்கள் இல்லங்கள் திரும்பிக் கொண்டிருக்கும் எண்ணற்றவர்களின் மூலம் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்த இறைவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சியை அறிவித்ததைத் தியானித்து,
உலகம் முழுவதும் கொரோனா நோயினால் பாதிப்புக்குள்ளான அனைத்து மக்களும் பரிபூரண சுகம் பெறவும் மேலும் தொற்று நோய் பரவும் வேகம் நன்கு குறையவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சுயநலமற்ற மகத்தான சேவையை மக்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
பசி, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் ஏழ்மையைப் போக்க இறைவனின் இரக்கத்தினை நாடி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.