புனித பவுலடியார் திருத்தலத்தில் இறை இரக்கத் பெருவிழாத் திருப்பலி
ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணியளவில்
கீளியன் குடியிருப்பு பங்குத்தந்தை வண பிதா ஜெஸ்லி ஜெகானந்தன் அடிகளாரினது தலைமையில் இடம் பெற்றது.
ஆரம்பத்தில் பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்லி ஜெகானந்தன் அடிகளார்
இறை இரக்க வழிபாட்டினை நடாத்தி இறைவேண்டுதல் செய்தார்.
அதனை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள், அருட்சகோதரர் இனைந்து இறை இரக்க திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் இறைஇரக்கத்தின் இருபதாவது ஆண்டை முன்னிட்டும்,
இறைஇரக்கத்தின் பெருவிழாவை முன்னிட்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர்
பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையினால் திவ்விய நற்கருணை ஆசீரும், திரு இருதய திருச் சுரூப ஆசீரும், போலந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இறை வணக்கம் செய்யப்பட்டு வரும் புனித புவுஸ்தினாவின் திருப்பண்ட ஆசீரையும் ஆயர் அனைத்து இறைமக்களுக்கும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.