அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்
திருப்பலி முன்னுரை – 1
இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். இன்று உயிர்ப்பு ஞாயிறு. அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
உயிர்ப்பு உன்னதமானது. ஆண்டவர் உயிர்த்தார் என்பதனால் தான் நம்முடைய விசுவாசம் உறுதிப் பெறுகின்றது. உயிர்ப்பிலே நம்பிக்கை கொண்ட மக்கள் நாம், அந்த நம்பிக்கை தருகின்ற வாழ்வினை சாட்சியாக்கி, நம் வாழ்வின் வழி, எல்லா ஆன்மாக்களையும் அவர் பாதத்தில் கொண்டு வந்து சேர்க்க, உறுதிபூண்டவர்களாய் பலியிலே பங்கேற்போம்.
திருப்பலி முன்னுரை – 2
இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்பு நிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று உயிர்ப்பு ஞாயிறு. அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக். அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று உயிர்ப்பு ஞாயிறு. பொய்மையும், அநீதியும் நம் வாழ்வின் இடையே தடைகளாகக் குறுக்கிட்டாலும் இறுதியில் அவை ஒன்றுமில்லாமல் வீழ்ந்து போகும் என்பது நம் ஆண்டவராம் இயேசுவின் உயிர்ப்பு சொல்கின்ற பாடம். பாவத்தின் மீதும், மரணத்தின் மீதும் அவர் அடைந்த உயிர்ப்பின் வெற்றி உலகம் அனைத்திற்கும் இறுதியான வெற்றி, உறுதியான வெற்றி. புதிய பாஸ்காவின் புனித செம்மறியாம் இயேசுக் கிறிஸ்துவுடன் இணைந்து உயிர்ப்பின் ஒளியில் வாழ்ந்திட பெருமகிழ்ச்சியுடன் இத் திருப்பலில் பங்கு பெறுவோம்.
திருப்பலி முன்னுரை – 3
இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்பு நிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று உயிர்ப்பு ஞாயிறு. அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
உயிர்ப்பு பெருவிழா புதிய வரலாறு. புரட்சி வரலாறு மரணத்தை வென்ற மாபெரும் மகிழ்ச்சி வரலாறு. இயேசு உடலோடு� உயிர்த்தெழுந்த வரலாறு. எனவே இன்று அக்களிப்போம். அகமகிழ்வோம். சீடர் கல்லறைவாயிலில் குனிந்து பார்த்தபொழுது, துணிகளை மட்டும் தான் காண முடிந்தது. �குனிந்த பார்வை� என்பது முழுப்பார்வை அல்ல. மீண்டும் சீடர்கள் நேரிடையாக கல்லறைக்குள் நுழைந்து பார்த்தபொழுது இயேசு உண்மையிலேயே உயிர்ந்துவிட்டார் என்பதைக் கண்டு நம்பினர். மறைநூல் வாக்கை நினைவு கூர்ந்து புரிந்து கொண்டனர். மீண்டும் அவரோடு உண்டு, குடித்து, உறவாடி, அனுபவம் பெற்று அவனியெங்கும் சான்று பகிர்ந்தனர். பொய்மையிலந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து: உயிர்ப்புக்கும். கடந்து� செல்கின்ற வாழ்வே உயிர்ப்பு வாழ்வு. நிலை வாழ்வு. நம்பிக்கையோடு நாமும் புதிய பாஸ்காவைத் தொடர்வோம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
உயிர்ப்புக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி திருத்தூதர் பேதுரு மக்களிடம் சான்று பகர்ந்த நிகழ்வு இடம் பெறுகிறது. மக்களால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு, தந்தையாம் கடவுளின் வல்லமையால் மூன்றாம் நாளில் உயிர்த் தெழுந்து சீடர்களுக்கு காட்சி அளித்தார் என்பதை பேதுரு எடுத்துரைக்கிறார். கடவுளால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தோன்றிய உயிர்த்த இயேசுவோடு உண்டு, பருகிய மகிழ்ச்சியுடன் பேதுரு சான்று பகர்கிறார். உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொண் டிருக்கும் நாம் அனைவரும் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று புது வாழ்வு வாழ வரம்வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.
கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.
இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43
அப்போது பேதுரு பேசத் தொடங்கி, திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்” என்றார்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
– இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்
திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என்று இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; -பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
உயிர்ப்புக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துக்குரிய வாழ்வு வாழு மாறு நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாட அழைப்பு விடுக்கிறார். தந்தையாம் இறை வனின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இறைமகன் இயேசுவின் மாட்சியில் பங்குபெறு மாறு, அவரோடு நாம் சிலுவையில் இறந்துவிட்டோம் என்பதையும் அவர் நினைவூட்டு கிறார். வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்துவோடு இணைந்து நாம் புனிதத்தில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
– இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா, அல்லேலூயா ! ”நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகவே நாம் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” அல்லேலூயா அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9
வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
Comments are closed.