சற்றுமுன் அரிசி வகைகளுக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்
அரிசி வகைகளுக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயித்து பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த புதிய விலை நிர்ணயம் இன்று (ஏப்ரல் 10) வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டரிசி/ குத்தரிசி ஒரு கிலோவின் அதிகூடிய சில்லறை விலையாக 90 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பா ஒரு கிலோ சிவப்பு/ வெள்ளை ஒரு கிலோ 90 ரூபாயும், கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாயும், வெள்ளை, சிவப்பு நாடு ஒரு கிலோ 85 ரூபாயும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் கட்டுப்பாட்டை மீறும் வர்த்தகர்கள் மீது நாளை சனிக்கிழமை தொடக்கம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குத்தரிசி ஒரு கிலோ 145 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.