திருப்பொழிவு செய்வதற்காக, திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளோம்
இயேசு அருள்பணித்துவத்தை ஏற்படுத்தியதை நினைவுகூரும் பெரிய வியாழனாகிய, ஏப்ரல் 09, இவ்வியாழனன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியில், அருள்பணியாளர்களுக்காகச் செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“அன்புச் சகோதர குருக்களே, நாம் அருள்பொழிவு செய்வதற்காக, நம்மையே வழங்குவதற்காக, அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளோம். அருள்பொழிவு எனும் கொடையைப் பாதுகாப்பதற்கும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், உலகம் முழுவதற்கும் கடவுளின் கருணையை வழங்குவதற்கும், அருள்பொழிவு எனும் கொடையைப் பாதுகாப்பதற்கும், தாழ்ச்சி எனும் வரத்திற்காக, இன்று நாம் எல்லாரும் சேர்ந்து செபிப்போம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
#இணைந்து செபிப்போம், #புனித வியாழன் ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் இந்த முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இரண்டாவது டுவிட்டர் செய்தியை, #இணைந்து செபிப்போம் என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ளார்.
இந்த மூன்று நாள்கள் திருவழிபாடுகளை, நேரடியாக யூடியூப்பில் காண்பதற்கு உதவியாக, அதன் முகவரியையும் https://www.youtube.com/watch?v=VJHI8bI0LWg திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 09, இவ்வியாழன், உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், புனித வியாழன் திருப்பலியை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.