இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது
இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Comments are closed.