இன்றைய நாளில் உங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறோம்
கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே இன்று உலகயை அச்சுறுத்தும் கொள்ளை நோய்கள் ஏற்கனவே 1919 ஆம் ஆண்டு ஐரோப்பிய தேசத்தில் மிகவும் பயங்கரமாக தாக்கியது அதிகமாக உயிர் பலியும் ஆனது அதன் பிறகு 100 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் அதே கொள்ளை நோய்கள் ஏன் இந்த கொள்ளை நோய்கள்
இந்த உலகில் அன்று தொடங்கி இன்று வரை இயற்கை சீற்றங்கள் கொள்ளை நோய்கள் தாக்குகின்றன அதற்கு காரணம் கடவுளின் கட்டளைகளை கடைபிடிப்போர் அதிகமாக இல்லை அதனால் தான் தேவமாதா 13 ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை காட்சி கொடுத்து இறைச் செய்திகளை தந்தார்கள் அந்த செய்தியை நாம் அலட்சியம் செய்து வந்ததால் இப்படி பட்ட அழிவுகளை சந்திக்கிறோம் அனைத்து காட்சிகளும் நம்மை ஜெபமாலை ஜெபிக்கவே தேவமாதா அழைப்பு கொடுக்கிறார்கள் அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் கத்தோலிக்க கிறித்தவர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இனிமேல் இந்த அழிவு வரக் கூடாது முற்றிலும் இந்த நோய்கள் நீங்கி உலகில் அமைதி திரும்ப வேண்டி நாம் ஜெபமாலை ஒப்புக் கொடுப்போம்
அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜெபக்கருத்துக்களுக்காக தினமும் ஜெபமாலை தியானித்து 5 லட்சம் ஜெபமாலை மணிகளை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் 1 ஜெபமாலை தியானித்து இந்த குழுவில் உங்கள் மணிகளை இனைத்தால் எங்களோடு இந்த 5 லட்சம் மணிகளின் பரிபூரண பலன்களில் நீங்களும் இனையலாம் விருப்பம் இருந்தால் இந்த கருத்துக்களுக்காக ஜெபமாலை தியானித்து நீங்கள் எத்தனை ஜெபமாலை ஜெபித்தீர்களோ அந்த மணிகளை எங்களுக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள நம்பருக்கு அனுப்பலாம் வாட்ஸ் அப் இல்லாதவர்கள் இந்த பதிவில் கமாண்ட் செய்யலாம் உதாரணமாக ஒருவர் சொன்னால் அது ஒரு ஜெபமாலை அதுவே ஒரு ஜெபமாலை நான்கு பேர் சொன்னால் அது நான்கு ஜெபமாலை என்று பதிவு செய்ய வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
ஜெபமாலை கருத்துக்கள்
சேசுமாமரியின் மாசற்ற திரு இருதயங்களுக்கு எதிராக உலகில் செய்யப்படும் துரோகங்களுக்கு பரிகாரமாகவும்
கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான சாத்தானின் சூழ்ச்சிகள் முற்றிலும் முறியடிக்கப்பட வேண்டியும், உலகில் திவ்ய பலிபூசை தடையின்றி நடக்கவும்
உலகை அச்சுறுத்தி கொண்டு வரும் கொள்ளை நோய்கள் நீங்கி அனைவரும் மனம் திரும்பி தேவ விசுவாசத்தில் வளரவும்
தேவமாதாவின் மாசற்ற இருதயபக்தி உலகெங்கும் பரவிடவும் , ஒவ்வொரு குடும்பங்களில் ஜெபமாலை பக்தி வளர வேண்டியும், இளையோர், சிறியோர் தேவ விசுவாசத்தில் உறுதியாக நிலைத்து வளரவும்
உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்கள், மறக்கப்பட்ட துறவறத்தார், நமது குடும்பங்களில் மரித்த ஆன்மாக்களுக்காகவும்
மேலும் குழுவில் உள்ள அனைத்து சகோதர குடும்ப உறவுகளின் தனிப்பட்ட அனைத்து கருத்துக்களுக்காகவும்
இந்த ஜெபமாலை மலர்களை எங்கள் சித்தத்தின் படி இல்லாமல் உமது சித்தத்தின் வழியாக மரியாயின் மாசற்ற திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறோம்
Comments are closed.