கொரோனாவால் உயிரிழந்தவர் யாழில் தங்கிய ஜந்து சந்தி சற்று முன் முற்றுகை!! -120 பேரை தேடும் பணிகள் தீவிரம்
கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் அங்கியிருந்த இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஜந்து சந்திப் பகுதியே இவ்வாறு சுகாதார துறையினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஜந்து சந்தியில் நடந்த திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கான கடந்த 7ம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் நீர்கொழும்பு சென்றுள்ளார்.
நீர்கொழும்பு சென்ற அவர் கடந்த 16ம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
பின்னர் நோய் தீவிரமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கியிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற் பதற்குச் சென்றுள்ளார்.
அங்கு இரு நாள்கள் தங்கியிருந்த பின்னர் நீர்கொ ழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் குறித்த நபருடைய நடமாட்டங்கள், பழகிய, சந்தித்த நபர்கள் குறித்த விசாரணையை
குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கையில் உள்ள சகல புலனாய்வு கட்டமைப்புக்களும் நேற்று மாலையே ஆரம்பித்திருக்கின்றன.
இதன்படி யாழ்.மாவட்டத்திலும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள், திருமண வீட்டில் கலந்து கொண்டவர்கள்,
என சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments are closed.