யாழ்.மாவட்ட மக்களுக்கு மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை..! பரவ ஆரம்பித்தால் இத்தாலியைபோல் பலரை காப்பாற்ற முடியாமல்போகும்
யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ்.மாவட்ட மக்கள் செயற்படு கிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமா டுகிறாா்கள் அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.
யாழ்.மாவட்டத்தில் உள்ளவா்களுக்கு கொரோனா பரவாது என்பதுதற்கு எந்தவொரு உத்தரவாத மும் கிடையாது. பரவும் என்பதற்கு 100 வீத சாத்தியங்கள் உள்ளது. பரவினால் இத்தாலி எடுத்துள் ள முடிவைபோல் பலரை காப்பாற்ற முடியாமல்போகும்.
மேற்கண்டவாறு இலங்கை மருத்துவ அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான ம ருததவ அதிகாாிகள் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே இவ்வாறு கூறியுள்ளனா். இதன்போது மேலும் அவா்கள் தொிவிக்கையில், இதுவரையில் யாழ்ப்பாணத்தில் எந்த நோயாளியும் இனம் காணப்படவில்லை.
பலாலி விமான நிலையம் மூலம் எமது மண்ணிற்கு 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வந்திறங்கி பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். அவர்கள் எவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களின் வீட்டு விலாசங்கள்
அவர்கள் தொடர்பான தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரிகள் சேகரித்து அவர்களை கண்காணித்து அவர்களுக்கு கோரோனோ உள்ளதா? என பரிசோதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
கொரொனோ தொற்றானது ஒரு நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றும். நோயாளியின் நீர் துளிகள் மூலமே அவை பரவுகின்றது. எனவே நாம் நோயில் இருந்து தப்புவதற்கு முதலில் செய்ய வேண்டியது, தேவையற்று வெளியில் நடமாடாமல்
வீட்டிலையே இருப்பதே சிறந்தது.அதற்காகவே அரசு விடுமுறையை விடுத்துள்ளது.ஆனால் யாழ்ப்பாணத்தை பார்க்கும்போது நோய்க்காக அரசு விட்ட விடுமுறையை பொருள்கள் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட விடுமுறைபோல
பலரும் பொருள்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதை விடினும் புடவைக்கடை , நகைக்கடை என்பவற்றிலும் மக்கள் கூட்டமாக பொருள்களை கொள்வனவு செய்வதில் உள்ளார்கள்.
இந்த நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க முடிந்த வரையில் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்லாது தவிர்ப்பதே சிறந்தது. அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதாயின் வீட்டில் உள்ள ஒருவர் மாத்திரம் சென்று அவற்றை கொள்வனவு செய்யவும்.
திருமண வீடு , பிறந்தநாள் கொண்டாட்டம் என்பவற்றில் கலந்து கொள்வதனையும் தவிர்த்து கொள்வது சிறந்தது.நோய் தொற்று உள்ளதாக சந்தேகிப்போர் வீட்டில் தனிமைப்பட்டு இருங்கள்
Comments are closed.