முடங்கிவிடுவதன் வழியாக தனிமையை வெற்றி கொள்ள முடியாது
தனிமையை வெற்றிகொள்ள இறைவனை நோக்கி குரல் எழுப்புவோம், என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“நமக்குள்ளேயே நாம் முடங்கிவிடுவதன் வழியாக, தனிமையை, நாம் வெற்றி கொள்ள முடியாது. கடவுளை நோக்கி குரல் எழுப்புவதன் வழியாக வெற்றி காணமுடியும், ஏனெனில், தனிமையை உணர்வோரின் குரலுக்கு கடவுள் செவிமடுக்கிறார்’, என, தன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.
மேலும், இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
“அர்ப்பணவாழ்வின் உலக நாளை சிறப்பிக்கும் இஞ்ஞாயிறன்று, அர்ப்பண வாழ்விற்கென தங்களை அர்ப்பணித்துள்ள அனைவருக்காகவும் செபிப்போம், தங்கள் தினசரி நடவடிக்கைகள் வழியாக, இறைவனுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் சேவையாற்றும் இவர்கள், கிறிஸ்துவின் அன்புக்கு நம்பிக்கைக்குரிய சாட்சிகளாக இருப்பார்களாக”, என தன் முதல் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.
இயேசு காணிக்கையாக்கப்பட்ட இந்நாளின் நற்செய்தி வாசகத்தில், மரியா, யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகியோர், தங்கள் கண் முன்னால் நடப்பதைக் குறித்து திகைப்புடன், பெரும் வியப்படைவதை காண்கிறோம், பெரும் வியப்படையும் இந்நிலையால், கடவுளுடன் நம் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக மாறுகிறது என, திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தி கூறுகிறது.
மேலும், இஞ்ஞாயிறன்று வெளியான மூன்றாவது டுவிட்டர் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘வாழ்விற்கு கதவுகளைத் திறங்கள் என்ற தலைப்புடன், இந்நாளில், இத்தாலியில் சிறப்பிக்கப்படும் வாழ்வின் நாள், கருவில் உருவானது முதல் அதன் இயற்கை மரணம் வரை, வாழ்வு பாதுகாக்கப்படுவதற்குரிய அர்ப்பணத்தை புதுப்பிக்கும் நல்லதொரு வாய்ப்பாக இருக்கட்டும்’ என எழுதியுள்ளார்.
Comments are closed.