நைஜீரியாவில் குருத்துவ மாணவர் கொலை
சனவரி 8ம் தேதி, நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட 4 குருத்துவ மாணவர்களுள் 3 பேர் அணமைக் காலங்களில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காவது மாணவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
நைஜீரியாவின் மத்தியப்பகுதியில் உள்ள Kaduna மாநிலத் தலைநகருக்கு அருகே Kakau எனுமிடத்திலுள்ள நல்லாயன் அருள்பணித்துவ பயிற்சி இல்லத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நான்குபேரில் மூவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மைக்கிள் என்ற குருத்துவ மாணவர், கடத்தல்காரர்களால் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும், துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் Church in Need அமைப்பு அறிவித்துள்ளது.
Boko Haram இஸ்லாமியத் தீவிரவாத குழுக்களால் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ஏற்கனவே தலத்திருஅவைத் தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஞாயிறு திருப்பலியில், காவல்துறையின் பாதுகாப்பை வேண்டி, பல கோவில்கள், குறிப்பிட்ட ஒரு தொகையை வழங்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
18 வயது நிரம்பிய குருத்துவ மாணவர் மைக்கிள் அவர்கள் கொலைசெய்யப்படுவதற்கு சிறிது முன்னர் ஆப்ரிக்க திருஅவையும் FIDES செய்தி நிறுவனமும் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2019ம் ஆண்டில், உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ள 29 மறைப்பணியாளர்களில், 12 அருள்பணியாளர்கள் உட்பட, 15 பேர், ஆப்பிரிக்காவில் கொலையுண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது
Comments are closed.