புரட்டஸ்தாந்து பிரிவினை சபைகளே.. ஆராதனை (Adoration/worship) என்பது என்ன என்று நீங்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை

புனிதர்களிடமோஅன்னைமரியாளிடமோ எங்களுக்காக மன்றாடும் என கேட்கும்போது, இவ்வளவு ஏன் எங்கள் நண்பரிடம் அல்லது குடும்பத்தினர், அல்லது குருக்களிடம் எங்களுக்காக மன்றாடும் என கேட்கும்போது, அதன் பொருள் அவர்களை நாங்கள் ஆராதிக்கிறோம் என்பதல்ல..
அதற்கு பெயர் பரிந்து பேசுதல்/ ஒருவர் மற்றவருக்காக மன்றாடுதல் (we are simply asking for their intercession).

*****ஒருவர் மற்றவருக்காக மன்றாடுவதை ஆராதனை என்பீர்களானால் பவுல் அந்த பாவத்தை செய்தவராகிவிடுவார் உங்களால்..
தனக்காக மன்றாட கேட்கும் போது அவர்களை ஆராதிப்பவராகிவிடுவார் உங்கள் கருத்துப்படி..

காண்க..
(நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் #மன்றாடுங்கள்.
எபேசியர் 6:19)

*****
கடவுளும் உங்கள் பிழையான கருத்தால் மற்றவரை ஆராதிக்க ஒத்துழைப்பவராகிவிடுவார்..
காண்க..
(கடவுள் சொன்னது… என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன்.
யோபு 42:8

ஒருவர் மற்றவருக்காக மன்றாடுவது ஆராதனை அல்ல…

கத்தோலிக்க திருச்சபையில் #ஆராதனை எது என்றால், அது திருப்பலி மட்டுமே..
திருப்பலியில் கடவுளுக்கான ஆராதனையை, அவர் மைந்தன் நம் ஆண்டவர் இயேசுவின் தியாகப்பலியை ஒப்புக்கொடுப்பதன் மூலமாக செலுத்துகின்றோம்..
#திருப்பலி மட்டுமே #கடவுளுக்கான ஆவிக்குரிய #ஆராதனை…
ஆதி திருச்சபை இதையே செய்தது…

மேடைபோட்டு இசை நிகழ்ச்சி செய்யவில்லை..

உண்மையான ஆராதனைக்கு எப்போதும் அவசியமானது ” தியாகம்”

ஆராதனை என்றால் என்ன என்று அறிந்து வாதிட வாருங்கள்…

நீங்கள் உங்கள் சபைகள் கடவுளுக்கு கொடுக்கும் ஆராதனை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதை முடிந்தால் இங்கே சொல்லுங்கள்…

Comments are closed.