மீட்பின் பெண்ணே, 2020ஐ உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம்
சிறப்பிக்கப்பட்ட, மரியா, இறைவனின் தாய் பெருவிழாவையும், 53வது உலக அமைதி நாளையும் மையப்படுத்தி, நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“கடவுளின் மனித சமுதாயத்தை உருவாக்கிய பெண்ணாகிய நம் அன்னையின் அடையாளத்தில் இந்த ஆண்டைத் தொடங்குவோம், இந்தப் பெண்ணில் மனித சமுதாயத்தின் மீள்பிறப்பு தொடங்கியது. நம் நாளின் வலைத்தளத்திற்குள் மனித சமுதாயத்தைப் பின்ன விரும்பினால், இப்பெண்ணோடு நாம் மீண்டும் துவங்குவோம்”.
“கடவுளும், மனித சமுதாயமும், ஒருவர் மற்றவரைவிட்டுப் பிரியாவண்ணம், பெண்ணின் வயிற்றில் ஒன்றிணைந்தன, நம் மனித சமுதாயம், கடவுளில் என்றென்றும் இருக்கின்றது, மரியா, கடவுளின் அன்னையாக என்றென்றும் இருக்கிறார்”.
“அமைதியின் இளவரசரின் அன்னையும், இப்பூமியின் அனைத்து மக்களின் அன்னையுமாகிய மரியா, ஒப்புரவு பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் நம்மோடு இருந்து காப்பாராக”
“நம்பிக்கை மக்களாக நம்மை ஒன்றிணைக்கும் கடவுளின் தாயிடம் இன்று மன்றாடுவோம். ஓ! அன்னையே, எம்மில் நம்பிக்கையை உருவாக்கும், எம்மை ஒன்றிணையும். மீட்பின் பெண்ணே, இந்த ஆண்டை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம், உம் இதயத்தில் அதனை வைத்தருளும்”
2020ம் புத்தாண்டு நாளன்று இந்த நான்கு டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.