யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த நான்கு அருட்சகோதரர்கள் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்
கொழும்புத்துறை புனித சவேரியார் பெரிய குருமடத்தில் குருத்துவ உருவாக்கப் பயிற்சிபெறும் அருட்சகோதரர்களுக்கான வேட்பாளர், வாசகர், பீடத்துணைவர் ஆகிய பணிக்குருத்துவத்தின் பல்வேறு நிலைகளுக்கு நியமிக்கும் சடங்குடன் திருத்தொண்டர்களை திருநிலைப்படுத்தும் திருச்சடங்கு நிகழ்வும் நடைபெற்றன. மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இத்திருச் சடங்கு நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன் போது மறைமாவட்டத்தை சேர்ந்த நான்கு அருட்சகோதரர்கள் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Jaffna RC Diocese
Comments are closed.