இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்
இயேசுவின் திருஇருதயமே
கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும்
சகல உபகாரங்களையும்
சொல்ல முடியாத உமது நன்மை தனத்தையும் நினைந்து
நன்றியறிந்த பட்சத்தோடு
உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக
விழுந்து கிடக்கிறோம்
நேசமுள்ள இயேசுவே
எங்கள் குடும்பங்களில் உள்ள
சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்
தேவரீர் எங்களை ஆசீர்வதித்து
இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில்
நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்
தவறி எங்களில் யாராவது
உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால்
அவன் குற்றத்திற்கு நாங்கள் நிந்தை பரிகாரம் செய்கிறோம்
உமது திருஇருதயத்தை பார்த்து
எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு
அவருக்கு கிருபை செய்தருளும்
இதுவுமின்றி உலகத்தில் இருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம்
பலவீனர்களுக்கு பலமும்
விருத்தாப்பியருக்கு ஊன்றுகோலும்
விதவைகளுக்கு ஆதரவும்
அனாதை பிள்ளைகளுக்கு தஞ்சமுமாய் இருக்க
தயைபுரியும்
ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள்
அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில்
தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக
இயேசுவின் இருக்கமுள்ள திருஇருதயமே
சிறுபிள்ளைகளை நீர் எவ்வளவு பட்சத்தோடு நேசித்தீரே
இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும்
உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்
அவர்களை ஆசீர்வதியும்
அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும்
தெய்வபயத்தையும் வளரச் செய்யும்
ஜீவியகாலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும்
மரண சமயத்தில் ஆறுதலாகவும்
இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்
திவ்ய இயேசுவே
முறை முறையாய் உமது திருசிநேகத்தில் ஜீவித்து
மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும்
உம்மோடு இளைப்பாற கிருபை புரித்தருளும்
ஆமென்
Comments are closed.