ஏன் கத்தோலிக்க திருச்சபை; கிறிஸ்துப்பிறப்பை மார்கழி 25ல் கொண்டாடுகின்றனர்?

கத்தோலிக்கர்கள் தமது ஆண்டவரும் இறைவனுமாகிய இயேசுக்கிறிஸ்துவின் உலக பிறப்பை பாரம்பரியமாக பெருவிழாவாக ஒவ்வொரு வருடமும் மார்கழி 25 அன்று கொண்டாடுகின்றனர்.
ஆனால் சில பிரிவினைவாத கிறிஸ்தவ குழுக்கள் (INC,SDA,JW,MCGI போன்ற பல பிரிவினை சபைகள்) கத்தோலிக்க திருஅவைக்கு நேர் எதிராக செயற்பட்டு கிறிஸ்து மார்கழி 25 ல் பிறக்கவில்லை என்றும், அது கத்தோலிக்க திருஅவையின் கண்டுப்படிப்பு, விவிலிய ஆதாரம் இல்லை, உரோமை கடவுளான சூரியனின் பிறந்தநாளைதான் கத்தோலிக்கர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டாடுகின்றனர் என்ற பிரிவினை போதகத்தை காலம்தோறும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த பிரிவினைவாதிகள் கிறிஸ்து பிறந்தது மார்கழி 25ல் இடம்பெற்றது என்பதை விவிலியத்தில் இருந்து காட்டும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் விவிலியமென்பது அனைத்து திகதிகளையும் கொண்ட “நாட்காட்டி” அல்ல என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர். ஆனால் கிறிஸ்து மார்கழியில் 25ல் பிறக்கவில்லை என்று கூறும் பிரிவினைவாதிகள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுகின்றனர்,

#கிறிஸ்துபிறப்பின்காலகணிப்பு#

கிறிஸ்து பிறப்பு நிகழ்வானது விவிலியத்திலிருந்தே கணிக்கப்பட்டது. இது திருமுழுக்கு யோவானின் தந்தையும் யூத குருவுமான, செக்கரியா கடவுளின் திருக்கோவிலில் தூபம் காட்ட சென்ற நிகழ்விலிருந்து இது கணிக்கப்படுகின்றது. இதை நாம் லூக்கா நற்செய்தி 1:9 ல் காணலாம்.

“குருத்துவ பணி மரபுக்கு ஏற்ப,
ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது” (லூக்கா 1:9).

தூய சட்டப்படி திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டும் திருச்சடங்கு வருடத்திற்கு ஒரு முறை யூத மாதமான “Tishrei 15” திஷ்ரே ( கிரகோரியன் நாட்காட்டியின் படி புரட்டாசி 25[September 25th]) அன்று இடம்பெற்றது.
இதன்படி செக்கரியா திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டும் பொழுதே ஆண்டவரின் தூதர் திருமுழுக்கு யோவானின் பிறப்பை அறிவிக்கின்றார். யூத மாதமான திஸ்ரே மாதம் 15ம் திகதி அதாவது புரட்டாதி 25 அன்று. அந்த நாளில்தான் எலிசபேத் கற்பமடைகின்றாள். (லூக்கா 1:11-13)

“அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்”
(லூக்கா நற்செய்தி 1:13)

எலிசபேத் கருவுற்ற நாளில் (புரட்டாதி 25) இருந்து 6 மாதத்திற்கு பின் மரியா கருவுறுகின்றார்.
லூக்கா நற்செய்தியில் 1:24-27, 30-31 இதை தொடர்ந்து வாசிக்கும் போது எலிசபேத் கருவுற்றதிலிருந்து ஆறாம் மாதத்தில் இறைவன் மீண்டும் தனது தூதர் வழியே மரியா என்னும் கன்னிப்பெண்ணிடம் கிறிஸ்து பிறப்பை முன்னறிவித்தார்.

“அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
(லூக்கா நற்செய்தி 1:24-27,30-31)

ஆகவே இதன்படி காலத்தை கணிப்பிட்டோமானால் இயேசுக்கிறிஸ்து மார்கழி 25ல் தான் பிறந்தார் என்பது புலப்படுகின்றது.

Tishrei 15 (புரட்டாசி 25) – (யோவானின் பிறப்பு பற்றி செக்கரியாவிற்கு அறிவிக்கப்படுதல், எலிசபேத் கருவுறுதல்)
+
6 மாதம் (எலிசபேத்தின் கற்பகாலம்)

= பங்குனி 25( இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, மரியா கருவாதல்)

பங்குனி 25 + (மரியாவின் 9 மாத கர்ப்பகாலம்) = மார்கழி 25

இவ்வாறு விவிலியத்தின் வழியாகவே கிறிஸ்துவின் பிறப்புநாள் குறிக்கப்பட்டது. ஆரம்பகால திருச்சபை தந்தையர்களின் இயேசு பிறப்பு தொடர்பான கருதுக்கள் / கோட்பாடு / சிந்தனையுடன் ஒருபோதும் பிழையாகாது..
இது ஒரு சான்றாக வேத பகுப்பாய்வை ஆதரிக்கிறது, இது சில கத்தோலிக்க எதிர்ப்பு குற்றச்சாட்டுகளாக கண்டுபிடிக்கப்படவில்லை. பாரம்பரியமாக நினைவுகூரப்படும் ஒரு பெருவிழா..

கிறிஸ்து பிறந்த திகதியை விட கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் மறைபொருளும் அதன் கொண்டாட்டமுமே முக்கியமாகும்….

மார்கழி 25 இயேசு பிறந்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடு( doctrine) அல்ல..இவ் திகதி கத்தோலிக்க திருச்சபையின் திருமறைக்கல்வியில் கூட எழுதப்படவில்லை..( catechism of the Catholic Church )
ஆனால் இது கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம், விவிலிய மற்றும் ஆதி தந்தையர்களின் கருத்துக்கள் அடிப்படையில் இதை பின்பற்றுகிறது..

இதன் அர்த்தம் திருச்சபை உண்மையில் பிறந்ததாக கூறப்படும் நாளை நிராகரிக்கிறது என்பதல்ல…அது ஒருவேளை 23,24,26,ஏன் 27 ஆக கூட இருக்கலாம்..
ஆனால் கத்தோலிக்க திருச்சபை அதன் கொள்கை நம்பிக்கை கோட்பாடுகளை எழுத்தில் கொண்ட உத்தியோகபூர்வ ஆவணமான “கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி” யில் இவ் திகதியை எங்கும் சேர்க்கவில்லை…
ஆனாலும் இந்த மார்கழி 25 என்ற நாளை பாரம்பரியம்,ஆதி திருச்சபை நம்பிக்கை கருத்துக்கள் அடிப்படையில் பின்பற்றுகிறது..

இருந்தபோதும் இந்த திகதி விவிலிய தில் இல்லை..ஆனாலும் விவிலிய காலகணிப்பு அடிப்படையில் இவ் நாள் பொருத்தமானதாகவும் வருவதால் ஏற்கிறது…இங்கு திருச்சபை கொடுக்கும் முக்கியத்துவம் மனிதனாக நம்மை மீட்க இயேசு பிறந்தார் என்பதே தவிர அதன் திகதிக்கு அல்ல…

என் இயேசு பிறந்ததை கொண்டாட எங்களுக்கு திகதி முக்கியமில்லை..
ஒருவேளை நீங்கள் மாசி மாதம் 29(feb 29) பிறந்திருந்தால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பிறந்த தினத்தை (உங்கள் உண்மையான பிறந்த நாள் வராத வருடங்களில்) 28 அல்லது பங்குனி 01 கொண்டாடுவதுபோலத்தான் இதுவும்..

இயேசு பிறந்த திகதி மிகச்சரியாக தெரியாமல் இருக்கலாம்…அது எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல..ஆனால் மீட்பராக என் இயேசு வரலாற்றில் பிறந்தார் என்பதை நாங்கள் இவ் நாளில் அறிவிக்கிறோம்..அறிவிப்போம்..

ஒரு கூட்டம் இந்த நாள் சாத்தானிய வழிபாடு செய்தநாள் அதனால் கிறிஸ்து பிறப்பும் அவ்வாறே என அடிப்படையில் உத்தரவாதமற்ற வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் கூறுகிறது…

ஒரு வேளை சாத்தாணிய நாளில் என் ஆண்டவர் பிறந்ததை கொண்டாடுவது சாத்தன்கள் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், எங்கள் மீட்டரான இயேசு பிறந்தார் என்பதை இன்னும் சத்தமாகவே சொல்லுவோம்…

ஆதி தந்தையர்கள் மார்கழி 25 குறித்து சொன்ன சில கருத்துக்கள் இங்கே

St. Theophilus (circa 171-183 A.D) was the first to identify December 25 as the birth date of Christ, saying …
.
“We ought to celebrate the birth day of our Lord on what day soever the 25th of December shall happen.” (Magdeburgenses, Cent. 2. c. 6. Hospinian, de origin Festorum Christianorum)
.
St. Iranaeus (circa A.D 202) 
.
“ In his work Adversus Haereses, Irenaeus (c. 130–202) identified the conception of Jesus as March 25 and linked it to the crucifixion at the time of the equinox, with the birth of Jesus nine months after on December 25 at the time of the solstice.” (Link: Source: Wikipedia – Christmas – Choice of December 25)
.
St. Hippolytus (circa. 170-236 A.D)
due Speculation as to the time of Jesus’ birth dates back to the 3rd century, Hyppolytus believed that Jesus was born on December 25. He explains in his Commentary on the book of Daniel (c. A.D. 204) that the Lord’s birth was believed to have occurred on that day, he said… 
.
” For the first advent of our Lord in the flesh, when he was born in Bethlehem, was December 25th, Wednesday, while Augustus was in his forty-second year, but from Adam, five thousand and five hundred years. He suffered in the thirty-third year, March 25th, Friday, the eighteenth year of Tiberius Caesar, while Rufus and Roubellion were Consuls.”
.
Apostolic Constitutions (circa A.D. 70-250)
The Apostolic Constitutions are a compilation, whose material is derived from early sources differing in age AND different early writers during apostolic age. he said..

Comments are closed.