இரண்டு மணிநேர இரகசிய வாக்குமூலம் வழங்கிய கர்தினால்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று (7) இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கவுள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை. நேற்று அவர் 4 மணித்தியாலங்கள் சாட்சியமளித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் கிட்டத்தட்ட நான்கு மணி நேர அறிக்கையை அளித்தார். இதன்போது, பொது விசாரணையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேர இரகசிய அறிக்கையை ஆணைக்குழுவின் முன் அளித்திருந்தார். இது காணொலி பதிவு செய்யப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு அவர் மீண்டும் அழைக்கப்பட்டார்
Comments are closed.