பிறரன்பில் பிரதிபலிக்கப்படும் இறைவழிபாடு
அடுத்திருப்பவர் மீது நாம் காட்டும் அன்பிற்கும், இறைவழிபாட்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து, டிசம்பர் 7, இச்சனிக்கிழமை, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளை உண்மையாக வழிபடுவது என்பது, ஒருவர் தமக்கு அடுத்திருப்பவர் மீது காட்டும் அன்பில் வெளிப்படுத்தப்படுகின்றது, என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், இச்சனிக்கிழமையன்று, எகிப்து வெளியுறவு அமைச்சர் Sameh Shoukry அவர்களையும், மால்ட்டா பிரதமர் Joseph Muscat அவர்களையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, தொமினிக்கன் துறவு சபையின் உலகத் தலைவர், அருள்பணி Gerard Francisco Timoner III ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
Comments are closed.